Tuesday, December 7, 2010

தோழியே...! We are born, not made.

நான் நேசித்த அனைவரும் என்னை நேசிக்க மறுத்த போதும்..
நான் நேசித்த அனைவரும்
என்னை நேசிக்க மறுத்த போதும்
எங்கோ ஊர்  மூலையிலிருந்து
நீ என்னை நேசித்தாய்...!

எனக்கு பிடித்த பொருட்களெல்லாம்
கிடைக்காமல் போன போதும்
என்னை உனக்கு பிடிக்குமென
ஒரு வார்த்தை கூறினாய்...!

எனக்காக எல்லோரையும் கேட்டேன்
இறைவனிடம் ஆனால் நான்
கேட்காமலே கிடைத்த உறவு
நீ மட்டும் தான் தோழியே...!

என்றாவது ஒரு நாள்
நீயும் என்னை வெறுபதாய்
இருந்தால் அதை இன்றே கூறிவிடு
இப்போதிலிருந்தே  கற்று கொடுக்கிறேன்
என் இதயத்திற்கு வலிகளை
தாங்குவது  எவ்வாறு என்பதை.........!!!

2 comments: