Tuesday, November 16, 2010

இப்படிக்கு கொசு

சத்தமின்றி..
முத்தமிட்டேன்..
அன்றவளை..
என் சொல்வேன்..
என் இன்பமதை..

முத்தமதின் விளைவாய்..
ஏறியதே அவள் உட்லில்..
நடுக்கமுடன் உஷ்ணந் தான்..

இன்றவளை முத்த மிடுதே..
மருத்துவர் கை மருந்தூசி..

ஏசு கின்றார் என்னை யவர்..
காய்ச்சலுக்குக் காரணமே நான் என்றே..
ஒழித்திடல் வேண்டுமாம்..
உலகிலிருந்தே எங்களை..

இப்படிக்கு
கொசு.